Genius Kamal ! ! !  

Posted by Lancelot in

Trisha :

கண்ணோடு கண்ணைக் கலந்தாளென்றால்

களங்கம் உள்ளவன் எச்சரிக்கை

உடனே கையுடன் கைகோர்த்தானா ?

ஒழுக்கங் கெட்டவள் எச்சரிக்கை

ஆடை களைகையில் கூடுதல் பேசினால்

அனுபவம் மிக்கவள் எச்சரிக்கை

கலவி முடிந்தபின் கிடந்து பேசினால்

காதலாய் மாறலாம் எச்சரிக்கை

கவிதை இலக்கியம் பேசினளாயின்

காசை மதியாள் எச்சரிக்கை

உன்னுடன் இருப்பது சுகமென்றாளா

உறுதியாய் சிக்கல் எச்சரிக்கை

அறுவடை கொள்முதல் என்றே காமம்

அமைவது பொதுவே நலமாகக்கொள்

கூட்டல் ஒன்றே குறியென்றானபின்

கழிப்பது காமம் மட்டும் எனக்கொள்

உன்னை மங்கையர் என்னெனக்கொள்வர்

யோசிக்காமல் வருவதை எதிர்கொள்

முன்னும் பின்னும் ஆட்டும் சகடை

ஆணும் பெண்ணும் அதுவேயெனக்கொள்

காமமெனப்படும் பண்டைச் செயலில்

காதல் கலவாது காத்துக்கொள்

இப்பெண்ணுரைக்கெதிராய் ஆணுறை ஒன்றை

இயற்றத் துணியும் அணி சேர்த்துக்கொள்

Kamal :

கலவி செய்கையில் காதல் பேசி

கனிவாய் மெலிதாய்க் கழுத்தைக் கவ்வும்

வெள்ளை பளிச்சிடும் பற்கள் வேண்டும்

குழந்தை வாயை முகர்ந்தது போலக்

கடும் நாற்ற மில்லாத வாயும் வேண்டும்

காமக் கழிவுகள் கழுவும் வேளையும்

கூட நின்றவன் உதவிட வேண்டும்

சமயலின் போதும் உதவிட வேண்டும்

சாய்ந்து நெகிழ்ந்திடத் திண்தோள் வேண்டும்

மோதிக் கோபம் தீர்க்க வசதியாய்

பாறைப் பதத்தில் நெஞ்சும் வேண்டும்

அதற்குப் பின்னால் துடிப்புள்ள இதயமும்

அது ரத்தம் பாய்ச்சி நெகுழ்திய சிந்தையும்

மூளை மடிப்புகள் அதிகம் உள்ள

மேதாவிலாச மண்டையும் வேண்டும்

வங்கியில் இருப்பு வீட்டில் கருப்பென

வழங்கிடப் புழங்கிட பணமும் வேண்டும்

எனக்கென சுதந்திரம் கேட்கும் வேளையில்

பகுத்தறிகின்ற புத்தியும் வேண்டும்

இப்படிக் கணவன் வரவேண்டும் என

ஒன்பது நாட்கள் நோம்பு இருந்தேன்

வரந்தருவாள் என் வரலட்சுமியென

கடும் நோம்பு முடிந்ததும் தேடிப் போனேன்

பொடிநடை போட்டே இடை மெலிய வெனக்

கடற்கரை தோறும் காலையும் மாலையும்

தொந்தி கணபதிகள் திரிவது கண்டேன்

முற்றும் துறந்து மங்கையரோடு

அம்மணத் துறவிகள் கூடிடக் கண்டேன்

மூத்த அக்காள் கணவனுக்கு

முக்கால் தகுதிகள் இருந்தும் கூட

அக்காளில்லா வேளையிலே அவன்

சக்காளத்தி வேண்டும் என்றான்

எக்குலமானால் என்ன என்று

வேற்று மதம் வரை தேடிப் போனேன்

வர வரப் புருஷ லட்சணம் உள்ளவர்

திருமணச் சந்தியில் மிகமிகக் குறைவு

வரம்தரக் கேட்ட வரலட்சுமியுனக்கு

வீட்டுக்காரர் அமைந்தது எப்படி ?

நீ கேட்ட வரங்கள் எதுவரை பலித்தது ?

உறங்கிக் கொண்டே இருக்கும் உந்தன்

அரங்கநாதன் ஆள் எப்படி ?

பிரபந்தம் சொல்லும் அத்தனை சேட்டையும்

வாஸ்தவமாக நடப்பது உண்டோ?

அதுவும் இதுவும் எதுவும் செய்யும்

இனிய கணவர் யார்க்குமுண்டோ ?

உனக்கேனுமது அமையப்பெற்றால்

உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான்

நீ அதுபோல் எனக்கும் அமையச் செய்யேன்

ஸ்ரீ வரலட்சுமி நமஸ்துதே

- Written by Kamalahasan

This entry was posted on Tuesday, November 23, 2010 at Tuesday, November 23, 2010 and is filed under . You can follow any responses to this entry through the comments feed .

4 தாறுமாறாய் கிழித்தவர்கள்/ Bashers

ITHU ENNA ARUN.....
KAMAL KATHAI, KAMAL KAVITHAI APPADINNU THIKKU MUKKAADA VACHCHUTTE... SUPER.......

November 27, 2010 at 1:26 AM

MANMATHAN AMBU...?

November 27, 2010 at 1:29 AM

always a kamal fan :D and he is a real multitalented genius...

Manmadhan ambae than- amazing songs...thalaivar than ella lyricsum eluthi irukaar...especially ithu kavithai nadayavae varuthu...trisha voiceum ithukku super...

November 27, 2010 at 9:12 AM

hey lancelot

gr8 to see you visit myblog after such a long time. how have you been?what u upto now?
i recently got married and jst getting used to it.take care

July 30, 2011 at 5:25 PM

Post a Comment